கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே இந்திலி பகுதியை சேர்ந்த ஆண்டவர் (வயது 33) இவர் 5 ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் 18-ந் தேதி ஆண்டவருக்கு வயிற்று வலி அதிகமானது. இதனால் வலி தாங்க முடியாமல் வயலுக்கு அடிக்கவைத்திருந்த பூச்சிமருந்தை எடுத்து குடித்தார். பின்னர் அருகில் இருந்தவர்கள் இவரை மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை சேர்த்தனர். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக ஆண்டவர் இறந்தார். இது குறித்து சின்னசேலம் போலீசார் வழக்கபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow US
Find US on Social Medias
- Advertisement -
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!