மே 25-ல் கள்ளக்குறிச்சியில் நடைபெறும் 3ஆம் ஆண்டு கல்லை உணவுத் திருவிழா 2025 பாரம்பரிய உணவுகள் மற்றும் இயற்கை வேளாண் பொருட்கள். அனுமதி இலவசம்!
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.
திருவள்ளுவர், திருக்குறள் – அதிகாரம்: மருந்து, குறள் 942:
விளக்கம்: முன் உண்ட உணவு செரித்த தன்மையை ஆராய்ந்து போற்றி, பிறகு தக்க அளவு உண்டால், உடம்புக்கு மருந்து என்று எதுவும் வேண்டியதில்லை.

கள்ளக்குறிச்சியில் மாபெரும் 3-ஆம் ஆண்டு கல்லை உணவுத் திருவிழா! இயற்கையை சுவைக்க ஓர் அரிய வாய்ப்பு!
கள்ளக்குறிச்சி, மே 12, 2025: கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களுக்கு ஒரு நற்செய்தி! நமது பாரம்பரிய உணவு முறைகளையும், இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவத்தையும் பறைசாற்றும் வகையில், “கல்லை இயற்கை வேளாண் சங்கம்” நடத்தும் மாபெரும் “3-ஆம் ஆண்டு கல்லை உணவுத் திருவிழா” எதிர்வரும் மே 25, 2025 (வைகாசி 11), ஞாயிற்றுக்கிழமை அன்று வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது.
இந்த உணவுத் திருவிழா, கள்ளக்குறிச்சி, கச்சிரபாளையம் சாலையில் அமைந்துள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும். இவ்விழாவிற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், உயர்திரு. எம்.எஸ்.பிரசாந்த் இ.ஆ.ப., அவர்கள் தலைமை தாங்கி சிறப்பிக்கவுள்ளார்.
விழாவின் சிறப்பு அம்சங்கள்
இவ்விழாவில், வேளாண் பொறியாளர், திரு.செ.பிரைட்னோ ராஜ் ந.க. (வே) அவர்கள் “இயற்கை வேளாண்மையின் நுட்பங்கள் மற்றும் நீர் மேலாண்மை” என்ற தலைப்பிலும், கள்ளக்குறிச்சி வேளாண் இணை இயக்குநர், திரு.வே.சத்தியமூர்த்தி எல்.எல்.பி (வே) அவர்கள் “இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம்” என்ற தலைப்பிலும், மண்வாசனை பாரம்பரிய உணவுப் பொருட்களின் தொழில் முனைவோர், திருமதி. மண்வாசனை மேனகா அவர்கள் “பாரம்பரிய அரிசி மற்றும் சிறுதானியங்களின் மதிப்பு கூட்டல்” என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்ற உள்ளனர்.

பாரம்பரிய உணவுகளின் சங்கமம்
திருவிழாவிற்கு வருபவர்கள், பல்வேறு பாரம்பரிய அரிசி வகைகளான
- கருங்குறுவை – பழம்பூம்.
- வாசனை சீரக சம்பா – பலா பிஞ்சு பிரியாணி.
- ஆத்தூர் கிச்சிலி சம்பா – மாங்காய் சோறு.
- பூங்கார் – சாம்பார் சோறு.
- தங்கச்சம்பா – வாழைப்பூ சோறு.
போன்ற சுவைமிகுந்த உணவுகளை உண்டு மகிழலாம். மேலும்,
- வரகு – தயிர் சோறு.
- நாட்டு காய்கறி – கூட்டு.
- அரிசி வடகம்.
- உளுந்து துவையல்.
- மாங்காய் கீறல.
- முழநெல்லிக்காய் ஊறுகாய் -போன்றவையும் இடம்பெறும்.
இவை மட்டுமல்லாது, இயற்கை முறையில் முறையில் விளைவிக்கப்பட்ட:
- பாரம்பரிய அரிசிகள்.
- காய்கறிகள்.
- நாட்டுக் கரும்புச் சாறு.
- மரபு தின்பண்டங்கள்.
- தேன்.
- பனை வெல்லம்.
- பல் பொடி.
- நாட்டுக்கோழி முட்டை.
- மூலிகைகள்.
- கைக்குத்தல் அரிசி.
- மூலிகைத் தேநீர்.
- சுக்குமல்லி காபி – போன்றவையும் விற்பனைக்குக் கிடைக்கும்.
அனுமதி இலவசம்!
“நஞ்சு இல்லா உணவே மருந்து! ஆரோக்கிய வாழ்விற்கு இயற்கை உணவே விருந்து!” என்ற உயரிய நோக்கத்தோடு நடைபெறும் இவ்விழாவிற்கு அனுமதி முற்றிலும் இலவசம். அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் வருகை தந்து, பாரம்பரிய உணவுகளை சுவைத்தும், இயற்கை வேளாண்மையின் அவசியத்தை உணர்ந்தும், ஆரோக்கிய வாழ்விற்கு அடித்தளமிட அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு: 9940892699, 9025614366, 9597993524, 9150787680 ஆகிய எண்களிலோ அல்லது Kallaiyarkaivelan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம்.