தியாக துருகம் அருகே உள்ள சூ.பள்ளிபட்டு கிராமத்தை சேர்ந்த ரகுராமன் உட்பட இருவர் தனது கிராமத்தில் உள்ள ஊராட்சி கிணற்றின் மின் மோட்டாரானது பழுதாகியது .இதனால் கிராமத்தில் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் வரவில்லை ஆகையால் இவர்கள் மின் மோட்டாரை சரி செய்ய கிணற்றுக்குள் இரும்பு சாரம் கட்டி இறங்கியுள்ளார்கள் .அப்போது கிணற்றுக்குள் இறங்கிய ரகுராமன் மற்றும் அவருடன் இறங்கியவர் மீது இரும்பு சாரம் உடைத்து கொண்டு விழுந்தததில் ரகுமானுக்கு தலையில் பலத்தடிபட்டது அவருடன் இருந்தவருக்கு லேசான காயம் ஏற்பட்டது .இதனால் ரகுமானை மீட்டு இரு சக்கர வாகனத்தில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார் .படுகாயம் அடைந்த மற்றொருவருக்கு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.