நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆஸ்பத்திரிகளில் போதுமான படுக்கை வசதிகளை மேற்கொள்ள சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
தமிழகத்தில் குறைந்து இருந்த கொரோனா நோய் பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் தமிழகத்தில் புதிதாக 1,243 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதேபோல் சென்னையிலும் நோய் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. தினசரி நோய் பாதிப்பு 500-ஐ நெருங்கி வருகிறது. நேற்று சென்னையில் மட்டும் 458 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
சென்னையில் இதுவரை 2 லட்சத்து 41 ஆயிரத்து 177 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 2 லட்சத்து 34 ஆயிரத்து 184 பேர் குணமடைந்துள்ளனர். 2 ஆயிரத்து 744 பேர் தொடர்ந்து சிகிச்சையில் இருக்கிறார்கள்.
சென்னையில் இதுவரை 2 லட்சத்து 41 ஆயிரத்து 177 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 2 லட்சத்து 34 ஆயிரத்து 184 பேர் குணமடைந்துள்ளனர். 2 ஆயிரத்து 744 பேர் தொடர்ந்து சிகிச்சையில் இருக்கிறார்கள்.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 8 மண்டலங்களில் நோய் பாதிப்பு வேகமாக அதிகரித்து உள்ளது. இதில் தேனாம்பேட்டை மண்டலத்தில் மட்டும் அதிகபட்சமாக 377 பேர் நோய் தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் இருக்கிறார்கள்.
இதேபோல் திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணாநகர், கோடம்பாக்கம், வளசரவாக்கம், அடையாறு ஆகிய மண்டலங்களில் நோய் தொற்று பரவல் வேகம் எடுத்துள்ளது.
பொதுமக்கள் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தி வருகிறார்கள். காய்ச்சல் முகாம்களும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆஸ்பத்திரிகளில் போதுமான படுக்கை வசதிகளை மேற்கொள்ள சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் வருமாறு:-
மணலி- 26.
மாதவரம் – 99.
தண்டையார் பேட்டை -134.
ராயபுரம் – 258.
அம்பத்தூர் -211.
அண்ணாநகர் – 311.
தேனாம்பேட்டை – 377.
கோடம்பாக்கம் – 282.
வளசரவாக்கம் – 190.
ஆலந்தூர் – 126.
அடையாறு – 188.
பெருங்குடி – 121.
சோழிங்கநல்லூர் – 65.