மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இன் பிராண்டிங்கில் புது ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து இருக்கிறது.
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் புதிய இன் பிராண்டு ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புது ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் புல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியி ஜி80 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இறுக்கிறது.
புதிய இன் 1 ஸ்மார்ட்போன் ஸ்டாக் ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் கொண்டுள்ளது. மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒஎஸ் அப்டேட் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் மே மாத வாக்கில் வழங்கப்படும் என மைக்ரோமேக்ஸ் தெரிவித்து உள்ளது.
புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் டூயல் சிம் ஸ்லாட், பின்புறம் கைரேகை சென்சார், கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டு இருக்கிறது.
மைக்ரோமேக்ஸ் இன் 1 ஸ்மார்ட்போன் டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப் சி, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பர்பிள் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது.
இந்தியாவில் மைக்ரோமேக்ஸ் இன் 1 (4 ஜிபி +64 ஜிபி) மாடல் விலை ரூ. 10499 என்றும் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 11,999 என்றும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எனினும், மார்ச் 26 ஆம் தேதி நடைபெறும் அறிமுக விற்பனையில் இரு வேரியண்ட்களும் முறையே ரூ. 9,999 மற்றும் ரூ. 11,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.