ஓமன் நாட்டில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஓமன் நாட்டில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி போடும் பணியானது வருகிற ஜூலை மாதத்துக்குள் 30 சதவீதம் பேருக்கு போடப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் போடும் வகையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசியின் முதல் டோஸ் போடுவதற்கும், 2-வது டோஸ் போடுவதற்கும் இடையிலான கால இடைவெளி 10 வாரங்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாடுகளுக்கு பயணம் செய்பவர்களுக்கு சுகாதார சான்றிதழ் வழங்குவது தொடர்பாக பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
கொரோனா தடுப்பூசியானது இன்னும் அதிகளவில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட இருக்கிறது.
ஓமன் நாட்டில் இதுவரை 91 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரிப்பதை தடுக்கும் வகையில் ஒவ்வொருவரும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முக கவசம் அணிந்து செல்வதுடன், சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.