ரிஷிவந்தியம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையில் தனிப்பிரிவு ஏட்டு கோபி, போலீஸ்காரர்கள் ராமு, குமார் ஆகியோர் ரிஷிவந்தியம் அருகே உள்ள பாசார் கிராமத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கணேசன் மகன் அய்யப்பன்(வயது 34) என்பவர் சாராயம் காய்ச்சுவதற்காக தனது நிலத்தில் 200 லிட்டர் கொள்ளளவுள்ள 2 பேரல்களில் சாராய ஊறலை பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து சாராய ஊறலை தரையில் கொட்டி அழித்த போலீசார் அதை பதுக்கி வைத்த அய்யப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அதேபோல் மாவட்ட வன அலுவலர் அபிசேக்தோமர் உத்தரவின் பேரில் பாலப்பட்டு வனச்சரக அலுவலர் ராஜா தலைமையில் வனத்துறையினர் கல்வராயன் மலையில் உள்ள வெதுர், வேங்கோடு, வெள்ளரிக்காடு, பலாப்பூண்டி, பொற்பம், மலைக்கோட்டாய் ஆகிய வனப்பகுதிகளில் சோதனை நடத்தினர். அப்போது மேற்படி கிராமங்களில் சாராயம் காய்ச்சுவதற்காக மர்மநபர்கள் 10 பேரல்களில் வைத்திருந்த சுமார் 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை தரையில் கொட்டி அழித்தனர். இதில் தொடர்புடைய நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.