வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் என்பதால் வழக்கத்தை விட அதிக வேட்பு மனுக்கள் தாக்கலாகின. சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளில் 412 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் என்பதால் வழக்கத்தை விட அதிக வேட்பு மனுக்கள் தாக்கலாகின. சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளில் 412 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
கெங்கவல்லி தனி தொகுதியில் 24, ஆத்தூர் (தனி) தொகுதியில் 21, ஏற்காடு (தனி) தொகுதியில் 24, ஓமலூர் தொகுதியில் 38, மேட்டூர்-73, எடப்பாடி- 48, சங்ககிரி-35, சேலம் மேற்கு -39, சேலம் வடக்கு -36, சேலம் தெற்கு- 39, வீரபாண்டி -35 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் 214 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
நாமக்கல் தொகுதியில் 44 பேர், ராசிபுரம் (தனி) தொகுதியில் 23 பேர், சேந்தமங்கலம் (தனி) தொகுதியில் 25 பேர், பரமத்திவேலூரில் 37 பேர், திருச்செங்கோட்டில் 40 பேர், குமாரபாளையத்தில் 45 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது. இதில் பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. வேட்பு மனுவை முறையாக பூர்த்தி செய்யாத ஒருசில சுயேட்சை வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடியானது.
வேட்பு மனுக்களை வாபஸ் பெற வருகிற 22-ந் தேதி கடைசி நாளாகும். அன்று மாலை வேட்பாளர்களின் இறுதி பட்டியல் வெளியிடப்படும்.