பொதுமக்கள் தடுப்பு வழிகளை பின்பற்றாமல் அலட்சியம் காட்டுவது மீண்டும் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளை விதிக்கும் சூழலை உருவாக்கிவிடும் என்று திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பேரூராட்சி பகுதியில் அவிநாசி-7, கொமரலிங்கம் -2. ஊத்துக்குளி, மூலனூர், முத்தூர், திருமுருகன் பூண்டி தலா ஒருவர் என மொத்தம் 13பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டம் முழுவதும் மொத்தம் 185 பேருக்கும், 15-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை 5 நாட்களில் மொத்தம் 138 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இம்மாதம் 8-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை 12 நாட்களில் திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 323பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் பொது இடங்களில் முககவசம் அணியாமல் இருந்தால் ரூ.200அபராதம், மாநகராட்சி பகுதியில் 10 இடங்களில் காய்ச்சல் முகாம், ஊரக பகுதிகளில் 30 இடங்களில் நடமாடும் காய்ச்சல் முகாம், மக்கள் அதிக அளவில் கூடும் பொது இடங்களில் மருந்து தெளிக்கப்படுகிறது. தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் பொதுமக்கள் கொரோனா தடுப்பு வழிகளை பின்பற்றாமல் அலட்சியம் காட்டுவது மீண்டும் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளை விதிக்கும் சூழலை உருவாக்கிவிடும் என்று திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.