டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ மாடல் கார் அசத்தலான புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக டாடா டியாகோ விளங்குகிறது. முன்னதாக டியாகோ லிமிடெட் எடிஷன் மாடலை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்தது. தற்போது டியாகோ மாடல் புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
முன்னதாக டாடா டியாகோ மாடல் டெக்டானிக் புளூ நிறத்தில் கிடைத்தது. தற்போது இந்த நிறத்திற்கு மாற்றாக டாடா டியாகோ மாடல் அரிசோனா புளூ எனும் புது நிறத்தில் கிடைக்கிறது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட டாடா சபாரி மாடலும் இதே நிற சாயல் கொண்டுள்ளது.
புதிய நிறம் தவிர டாடா டியாகோ மாடல் – விக்டரி எல்லோ, பிளேம் ரெட், பியல்சென்ட் வைட், பியூர் சில்வர் மற்றும் டேடோனா கிரே போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதுதவிர இந்த மாடலில் வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.
இதன் கேபின் ஹார்மன் இன்போடெயிமென்ட் சிஸ்டம், 4 ஸ்பீக்கர்கள், பவர் விண்டோ, சென்ட்ரல் லாக்கிங், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, 8 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது.
டியாகோ மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 84 பிஹெச்பி பவர், 113 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் டியாகோ மாடல் மாருதி சுசுகி வேகன்ஆர், ஹூண்டாய் சான்ட்ரோ மற்றும் மாருதி சுசுகி செலரியோ மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.