தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் படவாய்ப்பை இழந்து விட கூடாது என்பதற்காக புதிய திட்டம் போட்டு இருக்கிறாராம்.
தமிழில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகை, நடுவில் சித்தி பிரச்சனையால் வாய்ப்புகளை இழந்தாராம். அதன்பிறகு தமிழ் மொழி பக்கம் தலைகாட்டாமல் இருந்த நடிகை, தெலுங்கில் பிசியாக நடித்து வந்தாராம். தற்போது தமிழ் படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காண்பித்து வருகிறாராம்.
இந்த நிலையில், காமெடி நடிகருடன் நடிக்க நடிகையிடம் அணுகினார்களாம். நடிகையும் கதை கேட்டு அதிக சம்பளம் வேண்டும் என்று கேட்டாராம். திகைத்து போன படக்குழுவினர், நடிகையிடம் ஓரளவிற்கு சம்பளத்தை குறைத்து பேசினார்களாம். நடிகையும் பட வாய்ப்பை விட்டுவிட கூடாது என்பதற்காக உடனே சம்மதம் தெரிவித்து விட்டாராம்.