ஹூண்டாய் நிறுவனம் தனது புது எம்பிவி மாடலான ஸ்டாரியா புகைப்படங்களை வெளியீட்டு இருக்கிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் சொகுசு எம்பிவி மாடல் ஸ்டாரியா புகைப்படங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த எம்பிவி மாடல் 2021 அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புது ஸ்டாரியா மாடல் சொகுசு, சவுகரியம், அதிக இடவசதி மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.
இந்த மாடலில் எல்இடி ஹெட்லேம்ப் மற்றும், எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த மாடல் 18 இன்ச் அலாய் வீல்களை கொண்டுள்ளது. பின்புறம் வித்தியாச தோற்றம் கொண்டிருக்கும் ஸ்டாரியா மாடலில் செங்குத்தான டெயில் லேம்ப்கள் உள்ளன.
புதிய ஹூண்டாய் ஸ்டாரியா மாடல் 7,9, மற்றும் 11 இருக்கை ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இதன் உள்புறம் 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 64 நிறங்களை கொண்ட ஆம்பியன்ட் லைட்டிங் வழங்கப்படுகிறது.