ஆப்கானிஸ்தானுடனான முதல் டெஸ்டில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்று தொடரில் 1- 0 என முன்னிலை வகிக்கிறது.
இரட்டை சதமடித்த ஷஹிதி
ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் அபுதாபியில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர் இப்ராகிம் சட்ரன் அரை சதம் அடித்தார். அவர் 72 ரன்னில் வெளியேறினார். ஜாவித் அஹமதி 4 ரன்னிலும், ரஹமத் 24 ரன்னிலும் வெளியேறினர்,
அடுத்து இறங்கிய ஹஷ்மத்துல்லா ஷஹிதியும், அஸ்கர் ஆப்கனும் பொறுப்புடன் ஆடினர். இருவரும் சதமடித்து அசத்தினர்.
அஸ்கர் ஆப்கன் 164 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து அபாரமாக ஆடிய ஷஹிதி இரட்டை சதமடித்து அசத்தினார்.
இதையடுத்து, ஆப்கானிஸ்தான் அணி 160 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 545 ரன்கள் எடுத்து டிக்ளேர் செதனர்.
தொடர்ந்து ஜிம்பாப்வே அணி தனது முதல் இன்னிங்சை தொடர்ந்து ஆடியது. இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் ஜிம்பாப்வே அணி விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் எடுத்துள்ளது.
Leave a Reply
View Comments