சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் புதிய படத்தில் இளம் நடிகை ஒருவர் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி
சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’, ‘சீமராஜா’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பொன்ராம். இவர் அடுத்ததாக இயக்கும் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். பக்கா கமர்ஷியல் திரைப்படமாக உருவாகும் இதில் நடிகர் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
![விஜய் சேதுபதி - அனுகீர்த்தி வாஸ் விஜய் சேதுபதி - அனுகீர்த்தி வாஸ்](https://kallakurichi.news/wp-content/uploads/2022/08/202103191834313262_1_vs-2._L_styvpf.jpg)
இந்நிலையில், இந்த படத்தில் நாயகியாக அனுகீர்த்தி வாஸ் என்பவர் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு அளவில் நடந்த பெமினா மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.