திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘வலிமை அப்டேட் மக்களே’ என குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’. இப்படத்தின் அப்டேட்டை அஜித் ரசிகர்கள் கடந்த பல மாதங்களாக கேட்டுக் கொண்டிருக்கின்றனர். இருப்பினும் படக்குழுவினர் தரப்பில் இருந்து எந்த அப்டேட்டும் கிடைத்தபாடில்லை. ஓராண்டுக்கு மேலாக இந்த படம் குறித்து எந்தவிதமான அப்டேட்டும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘வலிமை அப்டேட் மக்களே’ என குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
‘ஜனநாயகத்தின் வலிமை உங்கள் ஒவ்வொருவரின் ஓட்டிலும் உள்ளது’ என்று அந்த புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அனைவரும் ஓட்டு போட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தேர்தல் விழிப்புணர்வுக்காகவும் அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளார். இதையும் ஒரு அப்டேட்டாக எடுத்துக் கொண்டு நேர்மையான முறையில் ஓட்டு போடுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
திருப்பூர் மாவட்ட கலெக்டரின் இந்த வித்தியாசமான விழிப்புணர்வு புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.