ராணுவத்தின் அதிரடி தாக்குதலில் யங்கரவாதிகள் 30 பேர் கொன்று குவிப்பு..

kallakurichi.news - 202103110201399978 Tamil News Tamil News 30 Taliban killed making bombs inside northern SECVPF

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் 30 பேர் கொன்று குவிப்பு - ராணுவத்தின் அதிரடி தாக்குதலில் வீழ்ந்தனர்

ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும் தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே 20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. முடிவில்லாமல் நீளும் இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர இருதரப்பும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கத்தார் தலைநகர் தோகாவில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்தபேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இதுவரை ஏற்படாத நிலையில் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. ராணுவ வீரர்களையும் போலீசாரையும் குறிவைத்து தலீபான் பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

அதே சமயம் அவர்களை ஒடுக்கும் விதமாக ராணுவமும் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஆப்கானிஸ்தானின் தெற்கு மாகாணமான காந்தஹாரில் உள்ள அர்கந்தாப் மற்றும் ஜாரி மாவட்டங்களில் தலீபான் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து ராணுவம் அதிரடி தாக்குதல்களை நடத்தியது. இதில் 30 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் 8 பயங்கரவாதிகள் படுகாயமடைந்தனர்‌.