மேட்டூர் அணைக்கு நீர்வரத்தை விட, தண்ணீர் திறப்பு அதிகமாக உள்ளதால் நேற்று 101.95 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 101.84 அடியாக சரிந்தது.
தமிழகத்தின் மிகப்பெரிய அணையான மேட்டூர் அணையின் மூலம் தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் சுமார் 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் பல மாவட்டங்களில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது. இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லை. இது தவிர கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை மற்றும் கபினி அணையில் இருந்து திறந்து விடப்படும் உபரிநீர் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் குறைவாக வருகிறது.
நேற்று விநாடிக்கு 172 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலையில் சற்று அதிகரித்து விநாடிக்கு 195 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
நீர்வரத்தை விட, தண்ணீர் திறப்பு அதிகமாக உள்ளதால் நேற்று 101.95 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 101.84 அடியாக சரிந்தது. இனிவரும் நாட்களில் இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் சரிய வாய்ப்புள்ளது.