முப்படைகளில் 79,349 இளநிலை அதிகாரிகள் பணியிடமும், 6,975 அதிகாரிகள் பணியிடமும் நிரப்பப்படாமல் உள்ளன.
முப்படைகளில் உள்ள காலியிடங்கள் தொடர்பான கேள்வி ஒன்றுக்கு ராணுவ இணை மந்திரி ஸ்ரீபாத் நாயக் நேற்று மாநிலங்களவையில் பதிலளித்தார்.
அப்போது முப்படைகளில் 1,07,505 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவித்தார். இதில் அதிகபட்சமாக ராணுவத்தில் சுமார் 86 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதில் 79,349 இளநிலை அதிகாரிகள் பணியிடமும், 6,975 அதிகாரிகள் பணியிடமும் நிரப்பப்படாமல் உள்ளன. இதைப்போல கடற்படையில் 1,044 அதிகாரிகளும், மாலுமிகள் உள்ளிட்ட பிற பணியிடங்கள் 12,317-ம் காலியாக உள்ளன.
விமானப்படையை பொறுத்தவரை அதிகாரிகள் பணியிடம் 589-ம், ஏர்மேன் பணியிடம் 7,231-ம் காலியாக இருப்பதாக மந்திரி தெரிவித்தார். இந்த காலியிடங்களை நிரப்ப அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.