புழு படத்தை அறிமுக இயக்குனர் ரதீனா இயக்குகிறார், இப்படத்தை மம்முட்டியின் மகனும், நடிகருமான துல்கர் சல்மான் தயாரிக்கிறார்.
மலையாள நடிகையான பார்வதி, இயக்குனர் சசி இயக்கத்தில் வெளியான ‘பூ’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இதை தொடர்ந்து தனுஷ் உடன் ‘மரியான்’, ஆர்யாவுடன் ‘பெங்களூர் நாட்கள்’, கமலின் ‘உத்தம வில்லன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர், தற்போது முதன்முறையாக மம்முட்டியுடன் இணைந்து புழு என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஏனெனில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கேரளாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில், நடிகர் மமுட்டியின் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை பார்வதி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அவருடனே இணைந்து நடித்துள்ளது ஆச்சர்யம் தான்.
புழு படத்தை அறிமுக இயக்குனர் ரதீனா இயக்குகிறார். இப்படத்தை மம்முட்டியின் மகனும், நடிகருமான துல்கர் சல்மான் தயாரிக்கிறார். இன்று மகளிர் தினத்தையொட்டி புழு படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.