சந்தோஷ் நாராயணனின் மகளான பாடகி தீ, வடசென்னை, நேர்கொண்ட பார்வை, பிகில் என பல்வேறு படங்களில் பாடியுள்ளார்.
இறுதிச் சுற்று படத்தில் ‘ஏ சண்டக்காரா’, மாரி 2 படத்தில் ‘ரெளடி பேபி’, சூரரைப் போற்று படத்தில் ‘காட்டுப் பயலே’, ஜகமே தந்திரம் படத்தில் ‘ரகிட ரகிட ரகிடா’ என தமிழகம் தாண்டி வைரல் ஹிட் அடித்த பல பாடல்களை பாடியவர் பாடகி தீ. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் மகளான இவர், வடசென்னை, நேர்கொண்ட பார்வை, பிகில் என பல்வேறு படங்களில் பாடியுள்ளார். இவரும் பாடகர் ‘தெருக்குரல்’ அறிவும் இணைந்து ‘என்ஜாய் எஞ்சாமி’ என்ற சுயாதீன இசைப் பாடலை பாடியிருகிறார்கள்.
இப்பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் சுதா கொங்கரா, கார்த்திக் சுப்புராஜ், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, இசையமைப்பாளர் தேவா உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஆடியோவை வெளியிட்டனர். வண்ணமயமாக எடுக்கப்பட்டு உள்ள இப்பாடல் வீடியோ இன்று யூடியூப்பில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் தான் இசையமைத்துள்ளார்.
#EnjoyEnjaami is all yours now ! We are very proud, honoured and excited to be doing this ! @talktodhee@TherukuralArivu@joinmaajjahttps://t.co/sdrHcwuGvN
— Santhosh Narayanan (@Music_Santhosh) March 7, 2021