கடந்த 26-ந்தேதி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நாளில் இருந்து அரசியல் கட்சிகளின் பிரசாரங்களை கண்காணித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகிறார்கள்.
இதனால் சென்னையில் உள்ள 16 சட்டசபை தொகுதிகள் உள்பட 24 சட்டசபை தொகுதிகள் சென்னை போலீஸ் எல்லைக்குள் வருகிறது.
இதையடுத்து சென்னை காவல்துறையினர் தேர்தல் விதிமீறல் தொடர்பாக வழக்குகள் போட்டு வருகிறார்கள். கடந்த 26-ந்தேதி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நாளில் இருந்து அரசியல் கட்சிகளின் பிரசாரங்களை கண்காணித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகிறார்கள்.
இதுவரை 154 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட பணம்-நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக 117 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
முன்எச்சரிக்கை நடவடிக்கையாக 35 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 1789 ரவுடிகள் நன்னடத்தை விதிகள் தொடர்பான உறுதி மொழி பத்திரத்தில் கையெழுத்து போட்டுள்ளனர்.