கூகுள் நிறுவனத்தின் புதிய பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போன் இந்த தேதியில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
கூகுள் நிறுவனத்தின் பட்ஜெட் ரக பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போன் ஜூன் 11 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. தோற்றத்தில் இது பார்க்க பிக்சல் 4ஏ போன்றே காட்சியளிக்கும் என்றும் கூறப்படுகிறது.
கூகுள் பிக்சல் 5ஏ மற்றும் பிக்சல் 6 மாடல்களில் சிறிய ஹோல்-பன்ச் வழங்கப்படும் என கூறப்படுகிறது. பிக்சல் 6 மாடலில் செல்பி கேமரா ஸ்மார்ட்போனின் நடுவில் வழங்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது. அதன்படி பன்ச்-போல் முந்தைய மாடலை விட 10 பிக்சல் அளவு சிறியதாக இருக்கும் என கூறப்படுகிறது.
பிக்சல் 5ஏ பன்ச் ஹோல் 55 பிக்சல் அளவு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மற்ற பிக்சல் போன்களில் இது 65 பிக்சலாக இருக்கிறது. முந்தைய தகவல்களில் பிக்சல் பட்ஸ் இயர்போன் ஏப்ரல் மாதத்திலும், புதிய பிக்சல் போன் ஜூன் 11 ஆம் தேதி அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தற்போது அந்த மாடல் பிக்சல் 5ஏ தான் என கூறப்படுகிறது. வெளியீடு தவிர புதிய பிக்சல் ஸ்மார்ட்போன் பற்றி எந்த தகவலும் தற்சமயம் வெளியாகவில்லை.