இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒரு சதம் அடித்து பாண்டிங்கின் சாதனையை வீராட் கோலி முறியடிப்பாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டி தொடரில் முதல் ஆட்டம் இன்று பிற்பகல் தொடங்கியது.
வீராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கிலும், 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கிலும் கைப்பற்றி இருந்தது.
இதேபோல ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் ஆர்வத்தில் இந்திய அணி உள்ளது. அதற்கு இன்றைய ஆட்டத்தில் வெற்றியுடன் கணக்கை தொடங்கும் வேட்கையில் இருக்கிறது.
டெஸ்ட் மற்றும் 20 ஓவர் தொடரை இழந்த இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரையாவது கைப்பற்றி விட வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட்கோலி ஒரு சதம் அடித்தால் தெண்டுல்கர் சாதனையை சமன் செய்து பாண்டிங் சாதனையை முறியடிப்பார்.
ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் சர்வதேச போட்டிகளில் கேப்டன் பதவியில் 41 சதங்களை அடித்துள்ளார். விராட் கோலியும், சர்வதேச போட்டிகளில் கேப்டன் பதவியில் 41 செஞ்சுரி அடித்து, பாண்டிங்குடன் இணைந்து முதல் இடத்தில் உள்ளார்.
ஒருநாள் தொடரில் ஒரு சதம் அடித்து பாண்டிங்கின் சாதனையை விராட் கோலி முறியடிப்பாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய மண்ணில் ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் தெண்டுல்கர் 20 சதத்துடன் முதல் இடத்தில் உள்ளார். வீராட்கோலி இதுவரை சொந்த மண்ணில் ஒருநாள் போட்டியில் 19 சதங்கள் அடித்துள்ளார்.
இந்த தொடரில் அவர் தெண்டுல்கரின் சாதனையை சமன் செய்வாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒற்றை சதத்தில் 2 சாதனைகளை கோலி இந்த தொடரில் முறியடிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. ஏனென்றால் அவர் சமீபத்தில் முடிந்த 20 ஓவர் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.