ரூ.20 லட்சம் இழப்பீடு கேட்டு தங்கமணியின் மனைவி கோவிந்தம்மாள் சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள காரிப்பாளையத்தைச் சேர்ந்தவர் தங்கமணி (வயது 50), மேஸ்திரி. கடந்த 2016-ம் ஆண்டு இவர், மரக்காணத்தில் புதுச்சேரி-சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து சென்றார். அப்போது, அதிவேகமாக வந்த அரசு பஸ், தங்கமணி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து ரூ.20 லட்சம் இழப்பீடு கேட்டு தங்கமணியின் மனைவி கோவிந்தம்மாள் சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி வி.சுதா, மனுதாரருக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் இழப்பீடாக 11 லட்சத்து 89 ஆயிரத்து 600 ரூபாயை ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.