தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்த கார்த்திக் சுப்புராஜ், சியான் 60 படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடி இருக்கிறார்.
விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான பீட்சா படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து ஜிகர்தண்டா, இறைவி, மெர்குரி என அடுத்தடுத்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி கவனம் பெற்ற அவர், ரஜினியின் பேட்ட படத்தை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனரானார்.
கார்த்திக் சுப்புராஜ் தற்போது விக்ரம் – துருவ் விக்ரம் நடிக்கும் சியான் 60 படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வரும் நிலையில் படக்குழுவினர் உடன் இணைந்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.
7 ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பாக லலித்குமார் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். வாணி போஜன், சிம்ரன் உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.