நடிகர் சிம்பு ‘பிக்பாஸ் 5’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது!!!

kallakurichi.news - 202103211629058506 Tamil News Tamil cinema BiggBoss 5 host update SECVPF

‘பிக்பாஸ் 5’ நிகழ்ச்சியை கமலுக்கு பதில் தொகுத்து வழங்கப்போகும் பிரபல நடிகர்?

கமல்
தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகின், நான்காவது சீசனில் ஆரி ஆகியோர் பிக்பாஸ் டைட்டிலை ஜெயித்தனர்.
வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஜூன் மாதத்தில் தொடங்கி அக்டோபர் வரை நடத்தப்படும். ஆனால் கடந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக லாக்டவுன் போடப்பட்டதால், பிக்பாஸ் 4 நிகழ்ச்சி திட்டமிட்டபடி ஜூன் மாதம் தொடங்கப்படவில்லை. பின்னர் அக்டோபர் மாதம் தொடங்கி இந்தாண்டு ஜனவரி 16-ந் தேதி வரை ‘பிக்பாஸ் 4’ நடைபெற்றது.
சிம்பு
ஆனால் இந்தாண்டுக்கான பிக்பாஸ் நிகழ்ச்சி வழக்கம்போல் ஜூன் மாதமே தொடங்கப்படும் எனக் கூறப்படுகிறது. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம்.
இந்நிலையில், இந்தாண்டுக்கான பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்க மாட்டார் என கூறப்படுகிறது. அவர் அரசியலில் பிசியாக உள்ளதால், அவருக்கு பதில் நடிகர் சிம்பு ‘பிக்பாஸ் 5’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.