பாதுகாப்புப்படை வீரர்கள் சென்ற பேருந்தை நக்சலைட்டுகள் கண்ணிவெடி வைத்து நடத்திய தாக்குதலில் ஐந்து வீரர்கள் மரணமடைந்தனர்
சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் கடேமேத்தா – கன்ஹார்கோன் கிராமங்களுக்கு இடையில் பாதுகாப்புப்படை வீரர்கள் நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையைில் ஈடுபட்டபின், பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென கண்ணிவெடியில் சிக்கி பேருந்து தூக்கியெறிப்பட்டது.
இதில் சம்பவ இடத்திலேயே மூன்று வீரர்கள் மரணமடைந்தனர். காயமடைந்த பல வீரர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி இரண்டு பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது. வெடி விபத்திற்குள்ளான பேருந்தில் 20 பேர் சென்றுள்ளனர்.