தேமுதிக மாவட்ட கழக அவைத்தலைவர் எம்.சிவக்குமார் ஒட்டன்சத்திரம் தொகுதியில் போட்டியிடுவார் என்று விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியிருப்பதாவது:
ஒட்டன்சத்திரம் தொகுதி தே.மு.தி.க வேட்பாளராக க.மாதவன் அறிவிக்கப்பட்டு இருந்தார். இன்று அவர் திடீரென மாற்றப்பட்டார்.
அவருக்கு பதில் தே.மு.தி.க மாவட்ட கழக அவைத்தலைவர் எம்.சிவக்குமார் ஒட்டன்சத்திரம் தொகுதியில் போட்டியிடுவார்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.