வீட்டில் தினமும் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் தீபம் ஏற்றிவைத்து, அந்த தீபத்தை வணங்குவதால், தீய சக்திகள் யாவும் விலகி, வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும்.
தீப வழிபாடு பழங்கால வழக்கங்களில் ஒன்றாக உள்ளது. வீட்டில் தினமும் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் தீபம் ஏற்றிவைத்து, அந்த தீபத்தை வணங்குவதால், தீய சக்திகள் யாவும் விலகி, வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும். வீட்டில் தீபம் ஏற்றி வைத்து வழிபடுவதால் சுபம், ஆரோக்கியம், நன்மை, தன வரவு அதிகரித்தல், நல்லபுத்தி ஆகியவை அதிகரிக்கும். தீபங்களுக்கு என்று ஒரு வழிபாடு பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது தமிழ் மாதத்தில் தீபத்தை சிறப்பிக்கும் மாதம் திருக்கார்த்திகை ஆகும். இந்த திருக்கார்த்திகை மாதத்தில் இல்லத்தில் திரு விளக்கேற்றி வழிபடுவது மிகவும் விஷேசமாகும்.
தீபம் ஏற்ற வேண்டிய இடங்களும், அதில் வைக்கப்பட வேண்டிய விளக்குகளும் நம் முன்னோர்களால் சொல்லிவைக்கப்பட்டுள்ளன. அதன்படி கோலமிடப்பட்ட வாசலில் ஐந்து விளக்குகள் வைக்க வேண்டும். திண்ணைகளில் நான்கு விளக்குகள், மாடக்குழி, நிலைப்படி மற்றும் நடைகளில் இரண்டு விளக்குகள், பூஜை அறையில் இரண்டு கார்த்திகை விளக்குகள் ஏற்றி வைத்து வணங்கினால் சர்வ மங்கலம் உண்டாகும்.