தமிழகம், புதுச்சேரிக்கு அடுத்த மாதம் 6-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி அதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதையடுத்து கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிட தேமுதிகவுக்கு முரசு சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.