தூத்துக்குடி, தென்காசி, நாங்குநேரியில் தலா 2 பேருக்கும், மாநகராட்சி பகுதி, பாப்பாக்குடி, பாளை ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கும் என 9 பேருக்கு தொற்று உறுதியானது.
இதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பாக தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
நெல்லை அரசு மருத்துவமனையில் இன்று 1,152 பேருக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டது. இதில் தூத்துக்குடி, தென்காசி, நாங்குநேரியில் தலா 2 பேருக்கும், மாநகராட்சி பகுதி, பாப்பாக்குடி, பாளை ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கும் என 9 பேருக்கு தொற்று உறுதியானது.
இதில் நாங்குநேரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேருக்கும், ராமையன்பட்டி பகுதியில் 4 வயது சிறுமி, தூத்துக்குடியில் 8 வயது சிறுவன் ஆகியோரும் அடங்குவர். இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட அனைவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
நேற்று பாளையில் ஒரே குடும்பத்தில் 4 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று நாங்குநேரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேருக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.