சிட்னி துறைமுகப் பாலம் என்பது சிட்னி துறைமுகத்தின் குறுக்கே அமைந்துள்ள உருக்கினாலான வளைவுப் பாலம் ஆகும். இது சிட்னி மத்திய வர்த்தகப் பகுதியையும் வடக்கு சிட்னியையும் இணைக்கும் போக்குவரத்து பாலமாக விளங்குகின்றது.
சிட்னி துறைமுகப் பாலம் என்பது சிட்னி துறைமுகத்தின் குறுக்கே அமைந்துள்ள உருக்கினாலான வளைவுப் பாலம் ஆகும். இது சிட்னி மத்திய வர்த்தகப் பகுதியையும் வடக்கு சிட்னியையும் இணைக்கும் போக்குவரத்து பாலமாக விளங்குகின்றது. சிட்னி பாலமும் இதன் அருகே அமைந்திருக்கும் ஓப்பரா மாளிகையும் சிட்னிக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் பெருமையைத் தரக்கூடிய சின்னங்களாகும். இந்த மேம்பாலத்தின் வளைந்த தோற்றம் காரணமாக உள்ளூர் மக்களால் இது “கோர்ட்டுக் கொழுவி” என்று அழைக்கப்படுகின்றது.
1967 ஆம் ஆண்டு வரை இதுவே சிட்னியின் மிகப்பெரும் கட்டமைப்பாக இருந்தது. கின்னஸ் உலக சாதனைகளின் படி இப்பாலமே உலகின் மிக அகலமான பாலமாகும். இது உலகின் நான்காவது நீளமான வளைவுப் பாலமாகும்.
1924 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மேம்பாலம் கட்டும் பணிகள் 1400 தொழிலாளர்களுடன் 8 ஆண்டுகள் காலத்தில் 4.2 மில்லியன் பவுண்ட் செலவில் பாலம் நிர்மாணிக்கப்பட்டது. 6 மில்லியன் ஆணிகளும் 53000 தொன் உருக்கும் இதற்குப் பயன்படுத்தப்பட்டன. 1932 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் திகதி நியூ சவுத் வேல்ஸ் முதல்வர் “ஜோன் லாங்” இப்பாலத்தை அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார்.