ஏமப்பேர் புறவழிச்சாலை அருகே புளியமரம் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதித்தது.கள்ளக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதியில் சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
நேற்று மதியம் பெய்த மழையில், ஏமப்பேர் புறவழிச்சாலை அருகே இருந்த சாலையோர புளியமரம் மாலை 4:30 மணியளவில் வேருடன் சாலையில் விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் வாகனம் ஏதும் அவ்வழியே செல்லவில்லை.இதனால், கள்ளக்குறிச்சி – ஏமப்பேர் புறவழிச்சாலைக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து பாதித்தது.தகவலறிந்த இன்ஸ்பெக்டர் முருகேசன், தீயணைப்பு நிலைய அலுவலர் நாகேஸ்வரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று மரத்தை அப்புறப்படுத்தினர். இதனால், அப்பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.