சாம்சங் நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ரக 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.
சாம்சங் ஸ்மார்ட்போன்
சாம்சங் கேலக்ஸி எம்62 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவின் பிஐஎஸ் சான்று பெற்று இருக்கிறது. புது சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன் SM-M626B/DS எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. பிஐஎஸ் சான்று பெற்று இருப்பதால், புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேலக்ஸி எம்62 ஸ்மார்ட்போன் இந்தியாவில் பிப்ரவரி மாத வாக்கில் அறிமகம் செய்யப்பட்ட கேலக்ஸி எப்62 மாடலின் ரி-பிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது. கேலக்ஸி எப்62 மாடலில் 7000 எம்ஏஹெச் பேட்டரி, 64 எம்பி குவாட் கேமரா, sAMOLED டிஸ்ப்ளே உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

தற்சமயம் பிஐஎஸ் தளத்தில் இடம்பெற்று இருக்கும் SM-M626B/DS மாடல் நம்பர் கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் 5ஜி கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. இதன் 4ஜி வெர்ஷன் SM-M625 எனும் மாடல் நம்பர் கொண்டிருந்தது. முந்தைய கேலக்ஸி ஏ32 4ஜி வேரியண்ட் SM-A325 எனும் மாடல் நம்பரும், 5ஜி வேரியண்ட் SM-A326 எனும் மாடல் நம்பர் கொண்டிருந்தது.
சாம்சங் கேலக்ஸி எப்62 ஸ்மார்ட்போன் எக்சைனோஸ் 9825 4ஜி பிராசஸர் கொண்டிருந்ததால், கேலக்ஸி எம்62 5ஜி ஸ்மார்ட்போன் வேறு பிராசஸர் அல்லது இதே பிராசஸருடன் கூடுதலாக எக்சைனோஸ் 5100 மோடெம் கொண்டிருக்கும் என தெரிகிறது.
Leave a Reply
View Comments