தண்டையார்பேட்டை சுந்தர விநாயகர் கோவிலை இடிக்க இன்று காலையில் ஏற்பாடுகள் நடந்ததால் அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
சென்னை தண்டையார்பேட்டை சுந்தரபிள்ளை நகரில் சுந்தர விநாயகர் கோவில் உள்ளது. அப்பகுதி மட்டுமில்லாமல் அருகில் இருக்கும் மற்ற பகுதியில் இருக்கும் பொது மக்கள் தினமும் கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்வார்கள்.
சிறியதாக இருந்த இந்த கோவிலை சில ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பித்து பெரிய கோவிலாக மாற்றி கும்பாபிஷேகம் நடத்தினார்கள். இந்த கோவில் தெருவை அடைத்து வாகனங்கள் செல்ல இடையூறாக இருப்பதாக வழக்கு தொடரப்பட்டது.
இதற்கு மாநாகராட்சி கோவிலை இடிக்க நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், இன்று காலையில் கோவிலை இடிக்க ஏற்பாடுகள் நடந்ததால் அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். மேலும் அங்கு பாதுகாப்புக்காக போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.