அமைச்சரவையில் காலியாக உள்ள இடங்களுக்கு நியமிக்கும் சாத்தியமான வேட்பாளர்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதால் விரக்தி அடைந்தார் பிரதமர்.
தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓச்சா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 3 அமைச்சர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, அமைச்சரவையில் காலியாக உள்ள இடங்களுக்கு நியமிக்கும் சாத்தியமான தலைவர்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதனால் விரக்தியடைந்த அவர், கேள்விக்கு பதிலளிப்பதை தவிர்க்கும் வகையில் தனது கையில் இருந்த சானிடைசரை செய்தியாளர்களின் முகத்திற்கு நேரே தெளித்தவாறு புறப்பட்டுச் சென்றார். செய்தியாளர்களுடன் கோபமாக பேசியதுடன், அவர்கள் கூறுவதை காதுகொடுத்து கேட்காமல் சென்றுவிட்டார். அவரது இந்த செயல்பாட்டை பார்த்து செய்தியாளர்கள் திகைத்தனர்.