கூட்டணியில் இருந்து விலகியது ஏன் தே.மு.தி.க. துணை பொதுச்செயலாளர் பார்த்தசாரதி விளக்கம்

 

அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகியது குறித்து தே.மு.தி.க. துணை பொதுச்செயலாளர் பார்த்தசாரதி கூறியதாவது:-

நாங்கள் கூட்டணியில் 23 தொகுதிகள் கேட்டு வற்புறுத்தி வந்தோம். ஆனால் அ.தி.மு.க. அதை தர மறுத்துவிட்டது.

மேலும் 2011 தேர்தலில் வெற்றி பெற்ற தொகுதிகளை எங்களுக்கு ஒதுக்கி தரவேண்டும் என்றும் கேட்டோம். அதற்கும் அ.தி.மு.க. சம்மதிக்கவில்லை.

எனவேதான் அந்த கூட்டணியில் இருந்து விலகுகிறோம். தனித்து போட்டியிடுவது தொடர்பாக நாளை மாவட்டச் செயலாளர்களுடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும்.