கவாசகி நிறுவனத்தின் புதிய பிஎஸ்6 நின்ஜா 300 மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவு அமேசான் தளத்தில் துவங்கி இருக்கிறது.
கவாசகி இந்தியா நிறுவனம் தனது நின்ஜா 300 பிஎஸ்6 மாடலுக்கான முன்பதிவு அமேசான் தளத்தில் நடைபெறுவதாக அறிவித்து இருக்கிறது. புதிய நின்ஜா 300 மாடலை வாங்க விரும்புவோர் அமேசான் தளத்தில் ரூ. 3 ஆயிரம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இந்தியாவில் கவாசகி நின்ஜா 300 பிஎஸ்6 மாடல் விலை ரூ. 3.18 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். இது பிஎஸ்4 மாடலை விட ரூ. 20 ஆயிரம் அதிகம் ஆகும். பிஎஸ்6 நின்ஜா 300 லைம் கிரீன்-கேஆர்டி கிராபிக்ஸ், கேன்டி லைம் கிரீன் மற்றும் எபோனி என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.
புதிய மாடல் தோற்றத்தில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. எனினும், பிஎஸ்6 மாடலில் மேம்பட்ட கிராபிக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலிலும் ட்வின்-பாட் ஹெட்லைட், மஸ்குலர் பியூவல் டேன்க், ஸ்ப்லிட்-ஸ்டைல் சீட், குரோம் ஹீட்ஷீல்டு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
கவாசகி நின்ஜா 300 பிஎஸ்6 ரக 296சிசி, பேரலெல் ட்வின் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 38.8 பிஹெச்பி பவர், 26.1 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.