ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, ஆபத்து அதிகம் உள்ள கடலோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி
ஜப்பானில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் டோக்கியோ அருகில் உருவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 அலகாக பதிவாகியிருந்ததாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. 7.0 ரிக்டரில் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
இஷினோமாகியில் இருந்து 34 கிலோ மீட்டர் தொலைவில் கடலுக்கடியில் 60 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம்கொண்டிருந்தது.
நிலநடுக்கம் காரணமாக டோக்கியோவில் கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. பொதுமக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். ஆபத்து அதிகம் உள்ள பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Leave a Reply
View Comments