ஒன்பிளஸ் நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலுக்கான முன்பதிவுகளை அந்த நாட்டில் துவங்கி இருக்கிறது.
ஒன்பிளஸ் வாட்ச் மாடலுக்கான முன்பதிவு சீனாவில் துவங்கி நடைபெற்று வருகிறது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச் அறிவிப்பு வெளியாகி சில தினங்களே ஆன நிலையில், தற்போது முன்பதிவு துவங்கி இருக்கிறது.
சீனாவில் ஒன்பிளஸ் வாட்ச் முன்பதிவு செய்ய CNY50 இந்திய மதிப்பில் ரூ. 600 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் ஒன்பிளஸ் வாட்ச் வாங்கும் போது CNY 100 இந்திய மதிப்பில் ரூ. 1,100 உடனடி தள்ளுபடி பெறலாம் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
புதிய ஒன்பிளஸ் வாட்ச் விலை விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. எனினும், தற்போதைய தகவல்களின்படி ஒன்பிளஸ் வாட்ச் மாடலில் ப்ளூடூத், ஜிபிஎஸ் கனெக்டிவிட்டி, வாட்டர் ரெசிஸ்டண்ட், வட்ட வடிவ டையல் கொண்டிருக்கும் என தெரிகிறது.