காங்கிரஸ் கட்சி பலவீனமாகிவிட்டது என்று ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநில தேசிய மாநாடு கட்சியின் தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பரூக் அப்துல்லா கூறுகையில் ‘‘காங்கிரஸ் கட்சி பலவீனமாகிவிட்டது. இதை நான் நேர்மையாக சொல்கிறேன். நாட்டை காப்பாற்ற வேண்டும் என அவர்கள் விரும்பினால், விழித்து வலுவாக வரவேண்டும். மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை நன்றாக கவனிக்க வேண்டும். வீட்டிற்கு இருந்து கொண்டால், இது நடைபெறாது’’ என்றார்.