தமிழகத்தில் நேற்று 45-வது நாளாக கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. 1,297 இடங்களில் நடைபெற்ற இந்த தடுப்பூசி போடும் முகாமில் 85 ஆயிரத்து 472 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
தமிழகத்தில் நேற்று (சனிக்கிழமை) 45-வது நாளாக கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. 1,297 இடங்களில் நடைபெற்ற இந்த தடுப்பூசி போடும் முகாமில் 85 ஆயிரத்து 472 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதில் 60 வயதுக்கு மேற்பட்ட 27 ஆயிரத்து 931 முதியவர்களும், இணை நோயுடன் உடைய 45 வயதுக்கு மேற்பட்ட 18 ஆயிரத்து 69 பேரும், 10 ஆயிரத்து 775 சுகாதாரப் பணியாளர்களும், 28 ஆயிரத்து 697 முன்களப் பணியாளர்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
தமிழகத்தில் இதுவரை 60 வயதுக்கு மேற்பட்ட 1 லட்சத்து 36 ஆயிரத்து 914 முதியவர்களும், இணை நோயுடன் உடைய 45 வயதுக்கு மேற்பட்ட 79 ஆயிரத்து 400 பேரும், 4 லட்சத்து 12 ஆயிரத்து 459 சுகாதாரப் பணியாளர்களும், 2 லட்சத்து 19 ஆயிரத்து 303 முன்களப் பணியாளர்கள் என மொத்தம் 8 லட்சத்து 48 ஆயிரத்து 76 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.