தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை ஷாலினி பாண்டேவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.
தெலுங்கு சினிமாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகி மிகவும் சூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இந்தப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. இப்படத்தில் இவரின் கதாபாத்திரம் அதிகம் பேசப்பட்டதால், தெலுங்கு சினிமாவை தவிர தமிழ், இந்தி எனப் பல மொழிகளிலும் கவனம் பெற்றார்.
இவர் தமிழில் “100% காதல்“, “கொரில்லா“, போன்ற படங்களில் நடித்து இருக்கிறார். அழகான குண்டு கன்னத்திற்கு ரசிகர்கள் ஏராளம். இந்நிலையில் ஷாலினி பாண்டே உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் உங்களுடைய குண்டு கன்னங்கள் எங்கே என்று கேட்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.