ரியல்மி நிறுவனம் தனது நார்சோ ஸ்மார்ட்போனிற்கு புது ஆண்ட்ராய்டு அப்டேட் வெளியிட துவங்கி இருக்கிறது.
ரியல்மி நிறுவனம் தனது நார்சோ 20 ஸ்மார்ட்போனிற்கு ரியல்மி யுஐ 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வெளியிட்டு உள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் ரியல்மி யுஐ 2.0 ஓபன் பீட்டா அப்டேட் வெளியிட்டது. முன்னதாக ரியல்மி எக்ஸ்50 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனிற்கு ரியல்மி யுஐ 2.0 அப்டேட் வெளியிட்டு இருக்கிறது.
ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ரியல்மி யுஐ 2.0 சிஸ்டம் குளோனர், குவிக் ரிட்டன் பபிள், மேம்பட்ட டார்க் மோட், புதிய ஆப் டிராயர், மூன்றாம் தரப்பு ஐகான் வசதி, புது வடிவமைப்பு கொண்ட நோட்டிபிகேஷன் பேனல், மேம்பட்ட ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே, மேம்பட்ட கேம் ஸ்பேஸ் என பல்வேறு புது அம்சங்களை வழங்குகிறது.
புதிய அப்டேட் படிப்படியாக வழங்கப்படுகிறது. இதனால் அனைவருக்கும் இந்த அம்சம் கிடைக்க மேலும் சில நாட்கள் ஆகும். நார்சோ 20 ஸ்மார்ட்போனினை தொடர்ந்து ரியல்மி 7 ப்ரோ மாடலுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.