திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் அடுத்த 10 நாட்களுக்கான சூறாவளி சுற்றுப்பயண அறிவிப்பை தலைமை வெளியிட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற உள்ளது. அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன
அந்த வகையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் அடுத்த 10 நாட்களுக்கான சூறாவளி சுற்றுப்பயண அறிவிப்பை தி.மு.க. தலைமை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
25-ந் தேதி (நாளை) காலை 8.30 மணிக்கு திருவண்ணாமலை, செங்கம், கீழ்பென்னாத்தூர், கலசப்பாக்கம், போளூர், ஆரணி, செய்யார், வந்தவாசியில் பிரசாரம் மேற்கொள்கிறார். (பேசும் இடம் திருவண்ணாமலை)
மாலை 3 மணிக்கு மயிலம், செஞ்சி, திண்டிவனத்திலும், (பேசும் இடம் செஞ்சி) மாலை 4.30 மணிக்கு பல்லாவரம், ஆலந்தூர், சோழிங்கநல்லூரிலும் தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களையும் ஆதரித்து (பேசும் இடம் பல்லாவரம்) ஆதரவு திரட்டுகிறார்.
26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 8.30 மணிக்கு திருவரங்கம், திருச்சி மேற்கு, லால்குடி, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை, மண்ணச்சநல்லூர், முசிறி துறையூர் பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார். (பேசும் இடம் திருவரங்கம்)
மாலை 3 மணிக்கு கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ண ராயபுரம், குளித்தலை தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நிகழ்த்துகிறார். (பேசும் இடம் கரூர்)
மாலை 4.30 மணிக்கு ஈரோடு மேற்கு, ஈரோடு கிழக்கு, பெருந்துறை, மொடக்குறிச்சி தொகுதிகளில் மக்களின் ஆதரவை திரட்டுகிறார். (பேசும் இடம் ஈரோடு மேற்கு)
27-ந் தேதி (சனிக்கிழமை) மாலை கொளத்தூர் தொகுதியிலும், இரவு 7 மணிக்கு சைதாப்பேட்டை, வேளச்சேரி, விருகம்பாக்கம் தொகுதிகளிலும் தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களையும் ஆதரித்து பிரசாரம் செய்கிறார். (பேசும் இடம் சைதாப்பேட்டை)
28-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு காங்கேயம், தாராபுரம், பல்லடம் தொகுதிகளிலும் (பேசும் இடம் காங்கேயம்), 10 மணிக்கு அந்தியூர், கோபிச் செட்டிப்பாளையம், பவானி, பவானிசாகர் தொகுதிகளிலும் (பேசும் இடம் கோபிச்செட்டிபாளையம்), மாலை 4 மணிக்கு கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு, வீரபாண்டி, மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர், சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு தொகுதிகளிலும் தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களையும் ஆதரித்து ஆதரவு திரட்டுகிறார்.
சேலத்தில் நடைபெறும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் பிரசாரக் கூட்டத்தில் பேசுகிறார்.
29-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 8.30 மணிக்கு ஜோலார்பேட்டை,வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர் தொகுதிகளிலும் (பேசும் இடம் ஜோலார்பேட்டை), மாலை 3.30 மணிக்கு அணைக்கட்டு, காட்பாடி, வேலூர், கே.வி.குப்பம், குடியாத்தம் தொகுதிகளிலும் (பேசும் இடம் அணைக்கட்டு), மாலை 5.30 மணிக்கு ராணிப்பேட்டை, அரக்கோணம், சோளிங்கர், ஆற்காடு தொகுதிகளிலும் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். (பேசும் இடம் ராணிப்பேட்டை)
30-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 8.30 மணிக்கு கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல் தொகுதிகளிலும் (பேசும் இடம் ஆரல்வாய்மொழி), மாலை 3.30 மணிக்கு ஆலங்குளம், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், தென்காசி, கடையநல்லூர் தொகுதிகளிலும் (பேசும் இடம் ஆலங்குளம்), மாலை 5.30 மணிக்கு ராஜபாளையம், திருவல்லிபுத்தூர், சாத்தூர், அருப்புக்கோட்டை, சிவகாசி, விருதுநகர், திருச்சுழி தொகுதிகளிலும் (பேசும் இடம் ராஜபாளையம்) பிரசாரம் மேற்கொள்கிறார்.
31-ந் தேதி (புதன்கிழமை) காலை 8.30 மணிக்கு போடி நாயக்கனூர், பெரியகுளம், ஆண்டிப்பட்டி, கம்பம் தொகுதிகளிலும் (பேசும் இடம் போடிநாயக்கனூர்), மாலை 3.30 மணிக்கு பழனி, ஆத்தூர், திண்டுக்கல், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம் தொகுதிகளிலும் (பேசும் இடம் பழனி), மாலை 5 மணிக்கு மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை, வால்பாறை தொகுதிகளிலும் (பேசும் இடம் மடத்துக்குளம்) ஆதரவு திரட்டுகிறார்.
ஏப்ரல் 1-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு மேட்டுப்பாளையம், உதகை, குன்னூர், கூடலூர் (பேசும் இடம் மேட்டுப்பாளையம்) தொகுதிகளிலும், 10 மணிக்கு கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், கோவை வடக்கு, கோவை தெற்கு தொகுதிகளிலும் (பேசும் இடம் கவுண்டம்பாளையம்), மாலை கொளத்தூர் தொகுதியிலும், இரவு 8 மணிக்கு மயிலாப்பூர், தியாகராய நகர், ஆயிரம் விளக்கு தொகுதிகளிலும் (பேசும் இடம் மயிலாப்பூர்) பிரசாரம் செய்கிறார்.
2-ந் தேதி (வெள்ளிக்கி ழமை) காலை 8.30 மணிக்கு ஜெயங்கொண்டம், அரியலூர், பெரம்பலூர், குன்னம் தொகுதிகளிலும் (பேசும் இடம் ஜெயங்கொண்டம்), மாலை 3.30 மணிக்கு குறிஞ்சிப்பாடி, கடலூர், புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் தொகுதிகளிலும் (பேசும் இடம் வடலூர்), மாலை 5.30 மணிக்கு சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார் (பேசும் இடம் சீர்காழி) தொகுதிகளிலும் தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களையும் ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
3-ந் தேதி (சனிக்கிழமை) காலை 8.30 மணிக்கு வேதாரண்யம், கீழ்வேளூர், நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி தொகுதிகளிலும் (பேசும் இடம் வேதாரண்யம்),
மாலை 3.30 மணிக்கு காரைக்கால் வடக்கு, காரைக்கால் தெற்கு, திருநள்ளாறு, நிரவி- திருப்பட்டினம், நெடுங்காடு தொகுதிகளிலும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.(பேசும் இடம் காரைக்கால்)
மாலை 5.30 மணிக்கு மண்ணாடிப்பட்டு, திருப்புவனை, ஊசுடு, மங்கலம், வில்லியனூர், உழவர் கரை,கதிர்காமம், இந்திரா நகர், தட்டாஞ்சாவடி, காமராஜ் நகர், இலாஸ்பேட்டை, காலாப்பட்டு, முத்தியால்பேட்டை, ராஜ்பவன், உப்பளம், உருளையன் பேட்டை, நெல்லித்தோப்பு, முதலியார்பேட்டை, அரியாங்குப்பம், மணவெளி, ஏம்பலம், நெட்டப்பாக்கம், பாகூர் (பேசும் இடம் புதுச்சேரி)