கல்வராயன் மலையில் உள்ள நீரோடைகளில் வரும் தண்ணீரை பயன்படுத்தி சமூகவிரோதிகள் சிலர் சாராயம் காய்ச்சி பல்வேறு மாவட்டங்களுக்கு கடத்தி விற்பனை செய்து வருகின்றனர். இதை தடுக்க கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தும்பராம்பட்டு, குரும்பலூர், சேராப்பட்டு, கிளாக்காடு ஆகிய பகுதிகளில் தீவிர சாராய வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது தும்பராம்பட்டு, குரும்பலூர் வனப்பகுதிகளில் 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட 15 பேரல்களில் 7 ஆயிரத்து 500 லிட்டர் சாராய ஊறல் மற்றும் ஒரு பேரலில் 600 லிட்டர் சாராய ஊறல் என மொத்தம் 8,100 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைத்திருந்ததை கண்டபிடித்தனர். இதையடுத்து அந்த சாராய ஊறலை தரையில் கொட்டி அழித்த போலீசார் சாராயம் காய்ச்சுவதற்காக ஊறலை பதுக்கி வைத்த மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Follow US
Find US on Social Medias
- Advertisement -

Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!