மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

kallakurichi.news - IMG 20190813 WA0017

கல்வராயன்மலை அருகே கிளாக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜாமணி(வயது 35). தொழிலாளியான இவர் நேற்று மாலை தனது மகள் பவானியுடன்(6) இரு சக்கர வாகனத்தில் கிளாக்காடு கிராமத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்தார். மூலக்காடு கிராமம் சீவத்துமூலை மலை அடிவாரத்தில் வந்தபோது எதிர்பாராதவிதமாக அங்குள்ள தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த ராஜாமணி சம்பவ இடத்திலயே பரிதாபமாக இறந்தார். காயமின்றி உயிர் தப்பிய பவானி தந்தையின் உடலை பார்த்து கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இந்த விபத்து குறித்து கரியாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.