மாவட்ட ஆட்சியர் 20-12-2021 அன்று அரசுப் பள்ளிக் கட்டிடங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

மாவட்ட ஆட்சியர் 20-12-2021 அன்று அரசுப் பள்ளிக் கட்டிடங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
மாவட்ட ஆட்சியர் 20-12-2021 அன்று அரசுப் பள்ளிக் கட்டிடங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
மாவட்ட ஆட்சியர் 20-12-2021 அன்று அரசுப் பள்ளிக் கட்டிடங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் உள்ள பழைய பள்ளி கட்டிடங்களை நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பி.என்.ஸ்ரீதர், இஆப, அவர்கள் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை.

கள்ளக்குறிச்சி மாவட்டம், விளம்பார் மற்றும் தச்சூர் காட்டுக்கொட்டகை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பயன்பாட்டில் இல்லாத பழை பள்ளி கட்டிடங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பி.என்.ஸ்ரீதர், இஆப, அவர்கள் இன்று (20.12.2021) ஆய்வு மேற்கொண்டார்.

இவ்வாய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குட்பட்ட அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடியதும், வெகுநாட்களாகப் பயன்பாட்டில் இல்லாததும், உறுதித் தன்மை அற்றதும் உடனடியாக இடித்து அகற்றப்பட வேண்டிய வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிவறைகள், சுற்றுச்சுவர் பற்றின விவரங்கள் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் மற்றும் உளுந்தூர்பேட்டை மாவட்டக் கல்வி அலுவலர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளன.

ஒன்றிய அளவில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் பட்டியல் பெறப்பட்டதில் 102 தொடக்கப் பள்ளிகளில் 102 கட்டிடாங்களும், 45 நடுநிலைப் பள்ளிகளில் 69 கட்டிடங்களும் உடனடியாக அகற்றப்பட வேண்டியவையெனக் கண்டறியப்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் 7 உயர்நிலைப் பள்ளிகளில் 20 கட்டிடங்களும், 26 மேல்நிலைப் பள்ளிகளில் 67 கட்டிடங்களும் அகற்றப்படுவதற்கு விழுப்புரம் செயற்பொறியாளர், பொதுப்பணித்துறை (கட்டிடம்) அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து தனியார் பள்ளிகளின் கட்டிடங்களை ஆராய மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் CRC Nodal மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், வட்டாரக் கல்வி அலுவலர், வட்டார வள மைய மேற்பார்வையாளர் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர் கொண்ட குழு உருவாக்கப்பட்டு பள்ளிகளின் கட்டிட உறுதித் தன்மை விவரங்களும் உடனடியாகத் தயார் செய்து, வழங்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அது போன்று தனியார் பள்ளி தாளாளர்கள் தாமாக முன்வந்து, பயன்பாட்டில் இல்லாத பழைய பள்ளி கட்டிடங்களை அகற்ற வேண்டும்.

முதன்மை கல்வி அலுவலர்‌ தலைமையில்‌ மாவட்ட கல்வி அலுவலர்கள்‌, வட்டாரக்‌ கல்வி அலுவலர்கள்‌ கொண்ட கூட்டம்‌ 18.12.2021 அன்று நடத்தப்பட்டு, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும்‌ இறை வணக்கக்‌ கூட்டத்தில்‌ பழுதடைந்த கட்டிடங்களுக்கு அருகே மாணவர்கள்‌ செல்லாதபடி தினமும்‌ அறிவுறுத்தவும்‌, பழுதடைந்து கட்டிடங்களுக்கு அருகே மாணவர்கள்‌ செல்லாதவண்ணம் உரிய தடுப்புகள்‌ ஏற்படுத்திடவும்‌ பள்ளி உடற்கல்வி ஆசிரியர்‌ உட்பட அனைத்து ஆசிரியர்களும்‌ இந்த விஷயத்தில்‌ மிகவும்‌ கவனமுடன்‌ பணியாற்றவும்‌ உரிய அறிவுரைகள்‌ வழங்கப்பட்டுள்ளது.

அதன்‌ தொடர்ச்சியாக, இன்றைய தினம்‌ விளம்பார்‌ மற்றும்‌ தச்சூர்‌ காட்டுக்கொட்டகை கிராமங்களில்‌ உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்‌ பயன்பாட்டில்‌ இல்லாத பழைய பள்ளி கட்டிடங்கள்‌ ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, கட்டிடங்களை இடிக்கும்‌ பணிகளைப் பார்வையிட்டு, பயன்பாட்டில்‌ இல்லாத பழைய கட்டிடங்களை விரைந்து அகற்றுவதற்கு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்கள்‌ தெரிவித்தார்‌.

இவ்வாய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்‌ மரு.இரா.மனரி, கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்‌ திருமதி.த.விஜயலட்சுமி, மாவட்ட கல்வி அலுவலர்‌ மற்றும்‌ பள்ளி தலைமையாசிரியர்கள்‌, ஆசிரியர்கள்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.