மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மாவட்ட ஆட்சியர் ஆய்வு
மாவட்ட ஆட்சியர் ஆய்வு
மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அவர்கள் 14-12-2021 அன்று சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

கல்வியே உங்கள்‌ எதிர்காலத்தை நிர்ணயிக்கும்‌ ஆயுதம்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு. பி.என்‌. ஸ்ரீதர்‌, இப, அவர்கள்‌ பள்ளி மாணவ மாணவியர்களுக்கு அறிவுரை கள்ளக்குறிச்சி மாவட்டம்‌,

இவ்வாய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்கள்‌ தெரிவித்ததாவது:

தமிழகம்‌ முழுவதும்‌ கடந்த 2020-21-ஆம்‌ கல்வியாண்டில்‌ கொரோனா ஊடங்கின்‌ காரணமாகப் பள்ளிகள் திறக்கப்படாமல்‌ இருந்தது. இந்த 2021-22-ஆம்‌ கல்வியாண்டில்‌ கொரோனா ஊரடங்கில்‌ படிப்படியாகத் தளர்வுகள் கொண்டுவரப்பட்டு, சுழற்சி முறையில்‌ பள்ளிகள்‌ செயல்பட்டது. தற்போது, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி முழுமையாகப் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.

அதன்படி, சின்னசேலம்‌ அரசினர்‌ ஆளர்கள்‌ மேல்நிலைப்‌ பள்ளியின்‌ செயல்பாடுகள்குறித்து இன்றைய தினம்‌ ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பள்ளியில்‌ மாணவர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்களின்‌வருகை குறித்தும்‌, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவது குறித்தும்‌, பள்ளியின்‌ உட்கட்டமைப்பு வசதிகள்‌ குறித்தும்‌, பள்ளியில்‌ உள்ள உபகரணங்கள்‌ மற்றும்‌ மாணவர்களுக்கு அடிப்படை தேவைகளான குடிநீர்‌ வசதி, கழிப்பறை வசதி ஆகியவை குறித்தும்‌, மாணவர்களுக்கு வழங்கப்படும்‌ சத்துணவு குறித்தும்‌ பள்ளி தலைமையாசிரியர்‌ மற்றும்‌ மாணவர்களிடம்‌ கேட்டறியப்பட்டது. மேலும்‌, மேல்நிலை வகுப்புகளில்‌ பயிலும்‌ மாணவ வருகை பதிவேடு, இருப்புக்‌ கோப்பு, சத்துணவு பதிவேடு மற்றும்‌ பள்ளியில்‌ பராமரிக்கப்பட்டு வரும்‌ இதர பதிவேடுகள்‌ ஆய்வு செய்யப்பட்டது.

தொடர்ந்து, மாணவர்களின்‌ வருகை குறித்தும்‌, பெற்றோர்கள்‌ தங்கள்‌ குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப விருப்பம்‌ உள்ளதா என்பது குறித்தும்‌, மாணவர்களின்‌ கற்றல்‌ திறன்‌ குறித்தும்‌, பள்ளி நிர்வாகம்‌ குறித்தும்‌ பள்ளியில்‌ பணிபுரியும்‌ ஆசிரியர்களிடம்‌ கேட்டறியப்பட்டது. மேலும்‌, பள்ளியில்‌ உள்ள மாணவ மாணவியர்களுக்கு பாலியல்‌ சீணர்டல்கள்‌ குறித்தும்‌, சைல்டு லைன்‌ குறித்தும்‌, குழந்தை திருமணம்‌ குறித்தும்‌ விழிப்புணர்வு ஏற்படுத்தத் தலைமையாசிரியர் மற்றும்‌ ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது,

அடுத்ததாக, இப்பள்ளியில்‌ அமைக்கப்பட்டுள்ள மாதிரிப்‌ பள்ளி ஆய்வு செய்யப்பட்டது. இம்மாதிரி பள்ளியில்‌ 11117 மற்றும்‌ 136 நுழைவுத்தேர்வு பயிற்சி பெறும்‌, 25 பள்ளிகளைச்‌ சேர்ந்த 80 பன்னிரெண்டாம்‌ வகுப்பு மாணவர்களுக்கு ஊக்குவிப்பு பயிற்சி நடத்தப்பட்டது. இப்பயிற்சியில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்கள்‌, மாணவர்கள்‌ இவ்வயதில்‌ படிப்பில்‌ கவனம்‌ செலுத்த வேண்டும்‌. ஆழ்ந்து புரிந்து படித்தால்‌ உங்களால்‌ எந்த உயரத்தினையும்‌ அடைய முடியும்‌. என்னைப் போன்று மாவட்ட ஆட்சித்தலைவராகவோ அல்லது எந்தவித அரசு உயர்‌ பதவிகளிலோ உங்களால்‌ வர முடியும்‌. இப்போது இங்கு நடைபெறும்‌ பயிற்சியைப்‌ போல அடுத்த ஆண்டு நடைபெறும்‌ பயிற்சியில்‌ நீங்கள்‌ வந்து பயிற்சி அளிக்கும்‌ அளவிற்கு வாழ்வில்‌ நீங்கள்‌ உயர வேண்டும்‌. மாணவர்களாகிய நீங்கள்‌ நன்றாகப் படித்து, 1187 மற்றும்‌ ர்‌ தேர்வுகளில்‌ வெற்றிபெற்று வாழ்வில்‌ முன்னேற்றம்‌ அடைய வேண்டும்‌. படிப்பு மட்டுமின்றி உங்களது தனித்திறமையையும்‌ வளர்த்துக்‌ கொள்ள வேண்டும்‌. கல்வியே உங்கள்‌ எதிர்காலத்தை நிர்ணயிக்கும்‌ ஆயுதம்‌ எனப் பள்ளி மாணவ மாணவியர்களை ஊக்கப்படுத்தினார்‌.

மேலும்‌, 10 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்‌ வீதம்‌ குழு அமைத்து, மாணவர்களின்‌ அனைத்து விதமான கருத்துக்களையும்‌ மனம்விட்டு பரிமாரிக்‌ கொள்ளவும்‌, மாணவர்களிடம்‌ உள்ள தாழ்வு மனப்பான்மையை போக்கும்‌ விதமாக ஆசிரியர்கள்‌ செயல்படவும்‌ வேண்டும்‌. படிப்புடன்‌ மட்டுமின்றி விளையாட்டு, ஓவியம்‌, கட்டுரை எழுதுதல்‌, பேச்சுத்‌ திறமை போன்ற திறமைகளை மாணவர்களே கண்டறியும்‌ விதத்தில்‌ போட்டிகளில்‌ பங்குபெறச்‌ செய்து, அத்திறமைகளை வளர்த்துக்கொள்வதற்கு தினந்தோறும்‌ அதற்கென நேரம்‌ ஒதுக்கிட வேண்டுமென ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்‌.

இவ்வாய்வின்போது, முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌ திருமதி.விஜயலட்சுமி, மாவட்ட கல்வி அலுவலர்‌ திரு.சிவராமன்‌ மற்றும்‌ பள்ளி தலைமையாசிரியர்‌, ஆசிரியர்கள்‌ உடனிருந்தனர்‌.