மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி அவர்கள் 970 பயனாளிகளுக்கு ரூ.9.95 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளைப் பயனாளிகளுக்கு வழங்கினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத்துறையின் சார்பாக 370 பயனாளிகளுக்க ரூ.9.95 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாணர்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பி.என்.ஸ்ரீதர், இஆப, மற்றும் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.து.ரவிக்குமார் ஆகியோர் முன்னிலையில் பொதுமக்களுக்கு இன்று (27.12.2021) வழங்கினார்.
இவ்விழாவில் மானர்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி, திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் கடந்த ஒரு மாதத்திற்கு முன் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொண்டு, இன்றைய தினம் பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.9.95 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் வரப்பெற்ற மனுக்களில், வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கக்கோரி மனுக்கள் பெறப்பட்டன.
அதன்படி, ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ், 358 நபர்களுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணைகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையினையும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 3 நபர்களுக்கு விதவை உதவித்தொகை பெறுவதற்கான ஆணையினையும், 2 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையினையும், வேளாண்மைத்துறையின் சார்பில் 1 நபருக்கு மரம் ஏறும் கருவியும், 1 நபருக்கு விவசாய கருவியும் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வரசு பொறுப்பேற்றதிலிருந்து, கடந்த 6 மாத காலமாகக் கொரோனா நோய்த்தொற்றினை கட்டுப்படுத்துவதோடு, அரசு நலத்திட்ட உதவிகளும் தமிழ்நாடு முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் இரண்டு தவணைகள் கொரோனா தடுப்பூசியினை செலுத்திக்கொள்ள வேண்டும். மானர்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திருக்கோவிலூர் பேரூராட்சியை நகராட்சியாகத் தரம் உயர்த்த வேண்டுமென்ற பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, தற்போது நகராட்சியாக அறிவித்துள்ளார்கள். இந்த ஆண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உயர்கல்வித்துறையின் மூலமாக 10 கல்லூரிகளும், இந்து சமய அறநிலையத்துறையின் மூலமாக 10 கல்லூரிகளும், கூட்டுறவுத்துறையின் மூலமாக 1 அரசு கலைக்கல்லூரியும் என மொத்தம் 21 அரசுக் கல்லூரிகள் தொடங்குவதற்கு ஆணை பிறப்பித்துள்ளார்கள். இதில் திருக்கோவிலூரிலும் 1 அரசு கல்லூரியும் துவங்கப்படவுள்ளது.
திருக்கோவிலூர் அரசு மருத்துவமனை மாவட்ட அரசு மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. அரகண்டநல்லூர் பகுதியில் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மேம்பாலம் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காட்டுப்பையூர் கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமா சாலைகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் அனைத்து நலத்திட்ட உதவிகளும் சென்றடைய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். துரிஞ்சலாற்றுப்பாலம், வசந்தகிருஷ்ணாபுரம் உயர்மட்ட பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரகண்டநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியாகத் தனித்தனியே கட்டித்தரப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள 500 வாக்குறுதிகளில் 300 வாக்குறுதிகளுக்கு மேல் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. அடித்தட்டு மக்களுக்குச் சமூக நீதியும், அனைத்து அரசு நலத்திட்ட உதவிகளும் சென்றடைய வேண்டும் என மாணர்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார்கள். எனவே, பொதுமக்களாகிய நீங்கள் இந்த அரசுக்கு என்றென்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் என மாணர்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
இவ்விழாவில் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.என்.புகழேந்தி, கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சிக்குழு துணைதலைவர் திருமதி.மு.தங்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மரு.இரா.மணி, திருக்கோவிலூர் கோட்டாட்சியர் செல்வி.கி.சாய்வர்தினி, திருக்கோவிலூர் நகராட்சி ஆணையர் திருமதி.கீதா மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.